மன்னாரில் சூட்டுக்காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்பு!

மன்னாரில் சூட்டுக்காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்பு!

editor 2

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணைகளுக்காக சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.

மன்னார் மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் இன்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளாரெனவும் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article