பண்ணையாளர்களின் பிரச்னையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் இவ்வாறு தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் நேற்று அவர் ஆற்றிய உரையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மட்டக்களப்பு வரவுள்ளர். மயிலத்தமடு பண்ணையாரள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மேய்ச்சல்தரை பெரும் பான்மை இனத்தவர்களால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பிரசினைக்கு தீர்வு காணப்படும் வரையில் போராட் டம் தொடரும்.
இல்லாவிட்டால் இதன் விளைவுகளை மட்டக்களப்பு வரும் போது ஜனாதிபதி பார்க்கக்கூடியதாக இருக்கும்.
ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வர முதல் இதனை தீர்க்காவிட்டால் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய கௌரவத்தை நாங்கள் வழங்குவோம் – என்றார்.