முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தொடர் போராட்டம்!

editor 2

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தையும் மாபெரும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பைச் செய்வதாக முடிவெடுத்துள்ளது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள்.

அதேவேளை,

வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற முன்றலில் நாளையதினம் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article