இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விளக்கமளிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்லவேண்டும் – டக்ளஸ்!

editor 2

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும். இதற்கு சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.அத்துடன், ‘இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயல்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று புதன்கிழமை மாவட்டஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

மீனவர்களின் பிரச்னை தொடர்பில் பேசப்பட்டபோது, கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ், சட்டவிரோதமாக இலங்கை கடற் பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயல்பாட்டை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இந்திய மீனவர்களை கைது செய்யும் செயல்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர். ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாககட்டுப்படுத்த முடியவில்லை.

‘நான் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன். இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் எனவும் நம்புகின்றேன்’ – என்றார்.

Share This Article