பிள்ளையானின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

பிள்ளையானின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

editor 2

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

அதன்பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் 90 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

தாம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் உயர் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதியரசர்களான மகிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. 

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து அறிவித்தது.

Share This Article