அமெரிக்கத்தூதுவர் – எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பு!

editor 2

தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது,

திருத்தப்பட்ட பயங்கரவாத சட்டமூலம் மற்றும் வடக்கில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பில், கவலையடைவதாக ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்படுகள் நல்லிணக்கம் மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றை வெற்றிக்கொள்வதில் சவாலாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்வதற்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்த வேண்டும் என கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனிற்கு இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் சர்வதேச குற்றங்கள் என்பன சர்வதேச சட்டத்தையும் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியனவற்றை மீறியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் இலங்கையில் நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையில் இருந்து விலகி சுதந்திரமாகவுள்ளனர்.

இதுவே , இலங்கை எதிர்கொள்ளும் அரசியல் சமூக நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது

இது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிரான விடயமாகும்.

எனவே, அதனை தடுப்பதற்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அழுத்தத்தை வழங்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article