எனது மனைவி தமிழ்ப் பெண் – சபையில் பிரசன்ன ரணதுங்க!

editor 2

தனது மனைவி ஒரு தமிழ் பெண் எனவும் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதி சபாநாயகர் அவர்களே!

நான் திருமணம் செய்திருப்பவர் தமிழ் பெண். 83 ஆம் ஜூலை கலவரம் நடந்த காலத்தில் எனது மனைவியை என்னால் வெளியில் அழைத்துச் செல்ல முடியாமல் போனது.

இன,மத பேதங்களை தூண்டி மேற்கொண்டு வரும் மோசமான நடவடிக்கைகளே இதற்கு காரணம்.

தற்போதும் அதனை இவர்கள் செய்கின்றனர்.

நான் மதியம் சிங்கள அரிசி சோறு சாப்பிடுவதாகவும் இரவில் தோசையும் வடையையும் சாப்பிடுவதாகவும் தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்தனர்.

எனினும் மூன்று வேளையும் நான் தோசை சாப்பிடுவதாக நான் தேர்தல மேடைகளில் கூறினேன்.

நான் அரசியலில் ஈடுபடுவது மக்களுக்காகவே அன்றி மனைவிக்காக அல்ல. மிக கேவலமான கதைகளை கூறுகின்றனர் – என்றார்.

Share This Article