சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற விருப்பம் – தயாசிறி!

editor 2

கட்சியின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு கட்சியின் தலைவரும் அரசியல் குழுவும் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவரின் தீர்மானத்தை தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். அதற்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்து கட்சி காப்பாற்றப்பட்டதாகவும், அரசாங்கத்தின் விருப்பத்துக்கேற்பவே தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share This Article