சனல் 4 இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சனல் 4இன் வீடியோ குறித்து வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சனல் 4 வெளியிட்ட முன்னைய வீடியோ போன்று பொய்களை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிப்பது அபத்தமானது எனவும் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட நபர்கள் சிலர் எனக்கு எதிராக அரசியல் நோக்கங்களை கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதிலும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு உதவுவதற்காக அனைத்தையும் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.