இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் – முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரும், மாந்தை மேற்கு – சன்னார் கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.