வவுனியா நவகமுவ பகுதியில் இடம்பெ்றற வாகன விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இரட்டைபெரிய குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரட்டைப்பெரியகுளத்திலிருந்து வவுனியா நோக்கி குறித்த வர்த்தகர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இந்நிலையில், அதே திசையில் இருந்து பயணித்த லொறி ஒன்று வர்த்தகர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.