114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தவிர, ஏனைய சபைகளுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள 225 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோகம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை, தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேநேரம் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.அ