பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று (08) சபையில் அறிவித்தார்.
அதன்படி அரசியலமைப்பின் கீழ் இந்த சட்டமூலம் தொடர்பான தீர்மானம் எதனையும் உயர் நீதிமன்றம் மேற்கொள்ளவில்லை என்று சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் மனுதாரர்களால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து அந்த மனுக்களை தொடர்ந்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு இன்றைய நாடாளுமன்ற அமர்வின் உத்தியோகப்பூர்வ நடவடிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்தியிருப்பதாகவும், பிரதி சபாநாயகர் அறிவித்தார்.