இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்டானில் கைது!

editor 2

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் ஏழு பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில், ஜோர்தான் – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலில் பணிபுரிய வரும் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Share This Article