கொழும்பு – காலிமுகத்திடலில் உள்ள யாசகர்கள் அம்பாந்தோட்டை – ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் அதிகரித்து வரும் யாசகர்களால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட யாசகர்கள் இருக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு பார்வையாளர்களுக்குச் சுகாதாரம் மற்றும் ஏனைய தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பசுமைத்திடலில் யாசகர்களால் ஏற்படும் பொது துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே, குறித்த யாசகர்களை அம்பாந்தோட்டை – ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு இடமாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.