ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்களே இருக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து எனக்குத் தெரியாது. எனினும், வெறுமனே அரசில் அமர நான் தயாரில்லை.
ஜனாதிபதியுடனோ அல்லது அவரின் பெரும்பான்மை அரசுடனோ எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்களே இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைக் கட்டியெழுப்பவும், தேர்தல் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கவும் அயராது உழைத்தேன்.” – என்றார்.