மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியைப் பயின்று வந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்றுமுன்தினம் முதல் காணாமல்போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஆங்கில வகுப்புக்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கையடக்கத்தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.