மகாவலி ஆற்றில் மூழ்கி மாணவன் ஒருவர் சாவு!

editor 2

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பளை, கஹடபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article