எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகின்றன. இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஜூன் 08ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி யின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின் பின்னர் கொழும்பை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பலபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.