நாட்டின் வெவ்வேறு இடங்களில் மூவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்று பிற்பகல் ஓட்டோ சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளார்.
ஓட்டோவைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது ஓட்டோ சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்.
காலி பொலிஸ் பிரிவில் இன்று காலை வயோதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தேங்காய் வியாபாரியான குறித்த நபர், வீதியோரத்தில் தேங்காய்களை விற்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது 68 வயதான தேங்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஏழு பிள்ளைகளின் தந்தையாவார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன கொடிதுவக்குகே சாகர என்ற 35 வயதுடைய நபரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
அவர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.