ரொறன்ரோவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்க நகரசபையில் தீர்மானம்!

ரொறன்ரோவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்க நகரசபையில் தீர்மானம்!

editor 2

தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை கனடாவின் ரொறன்ரோ நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் ரொறன்ரோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்கார்புரோ தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார்.

ரொறன்ரோவில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் சமூகத்துடன் இணைந்து ரொறன்ரோ நகரசபை பணியாற்ற இந்தத் தீர்மானம் கோரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் ஜோஸ் மெற்லோ வழிமொழிந்தார்.

தனது தீர்மானத்தை ரொறன்ரோ நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியதில் பெருமை கொள்வதாக வாக்கெடுப்பின் முடிவில் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஆதரித்த நகர முதல்வர் ஒலுவியா சோ உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த நினைவகம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஒருபோதும் மறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என பார்த்தி கந்தவேள் நம்பிக்கை
தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் ஸ்கார்புரோவில் இந்த நினைவகம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article