உகந்தை முருகன் ஆலய கடற்கரை குன்றில் புத்தர் சிலை!

உகந்தை முருகன் ஆலய கடற்கரை குன்றில் புத்தர் சிலை!

editor 2

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை சிறீ முருகன் ஆலய கடற்கரை
சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் –

கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

”உகந்தைமலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு வைக்கப்பட்டது?’, என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிர்காமம் போல் உகந்தை மலையையும் மாற்றுவதற்கு திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்றும் இந்து மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Share This Article