இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்துவதற்காக, எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இராமநாதன் அர்ச்சுனா, தமது அரச பதவியில் இருந்து விலகாமலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய குழாம் முன் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, விடயங்களை உறுதிப்படுத்த, தொடர்புடைய மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.