ஈரானில் மூவருக்கு மரண தண்டனை!

editor 2
People take part in a demonstration in support of Iranian protesters in Paris, on September 25, 2022. - Protests flared again in Iran on September 24, 2022 over the death of a woman in morality police custody, despite a crackdown by security forces in which at least 41 people have died, according to official figures. The main reformist party inside Iran called for the repeal of the mandatory Islamic dress code that Mahsa Amini had been accused of breaching as the protests over her death entered their ninth night. (Photo by Christophe ARCHAMBAULT / AFP) (Photo by CHRISTOPHE ARCHAMBAULT/AFP via Getty Images)

ஈரானில் பொலிஸ் காவலில் படுகொலை செய்யப்பட்ட மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆண்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஜீத் காஸிமி, சலேஹ் மிர்ஹாஷேமி, சயீட் யகோபி ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கை பாதுகாப்புப் படையினர் மூவரின் மரணத்துக்கு வழிவகுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Share This Article