களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர்கள், மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதன்போது, அவர்கள் தலா 5 இலட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மாதத்துக்கு ஒரு தடவை கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.