விமானப்படை உலங்குவானூர்தி விபத்து; ஆறு பேர் பலி!

விமானப்படை உலங்குவானூர்தி விபத்து; ஆறு பேர் பலி!

editor 2

விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

இச்சம்பவத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது 

மேலும் 6 பேர் தொடர்ந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Article