நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.