நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பணிகள் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை,
ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் திங்கட்கிழமை (05) பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுப்படவுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல், உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் , மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் இணைந்து வாக்குப் பெட்டிகளை அனுப்பி வைத்தனர்.