வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் திங்கட்கிழமை (05) அனுப்பி வைக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (06) இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.