சுங்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு; கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சுங்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு; கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

editor 2

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த ஒருவர் வெள்ளிக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்,மாத்தறை துடாவையைச் சேர்ந்த 44 வயதானவர் ஆவார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை (04) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொருள்களில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்த வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேற்பட்ட விஸ்கி பாட்டில்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து தங்களது கடமையை ஆரம்பித்தபோது, அவர் அந்த பொருட்களை தரையில் எறிந்து, சுங்க அதிகாரிகளைத் தடுத்துள்ளார்.

இது குறித்து சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, குறித்த பயணி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், ஞாயிற்றுக்கிழமை (04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் வெள்ளிக்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share This Article