கிளிநொச்சி – கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிளிநொச்சி பூநகரி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிப்பதற்காக 16 வயதான 4 சிறுவர்கள் நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.
இதில், ஒரு சிறுவன் காணாமல் போனார். அந்தப் பகுதியினர் நீண்டநேரம் நடத்திய தேடுதலில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.