பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

editor 2

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளது.

இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் (வயது 36) தாயாராவர்.

கணவன் வெளிநாட்டில் உள்ளதாகவும் மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.

கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Share This Article