தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் மரணம்!

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழில் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிள் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை (04) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொழுது மயக்கம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் மரணம் அடைந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைக்கு மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் என அறிக்கையில் பட்டுள்ளது. சடலம் துணைவியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This Article