கடந்த 10 வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களால் நாட்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சு முன்னெடுத்த ஆய்வில் இந்த விடயம் வெளிப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞானப் பீடத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2001 முதல் 2022ஆம் ஆண்டு வரை 386 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்காக 6 இலட்சத்து 62 ஆயிரத்து 388 வேலை மணித்தியாலங்கள் செலவிடப்பட்டன. வருடாந்தம் சுமார் 35 வேலைநிறுத்த போராட்டங்கள் முன்
னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.