உள்ளூராட்சி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இடம் பெற்றுள்ள இரு சம்பவங்கள் தெரியவந்துள்ளன.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச சபைக்கு இரு அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு நபர் போட்டியிடுகிறார் என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
இதேபோன்று,
கேகாலை யட்டியந்தோட்ட பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இரு கட்சிகளில் போட்டியிடுகிறார்.
அவர் இரு கட்சிகளின் சார்பிலும் பிரசார சுவரொட்டிகளை தயாரித்து
வெளியிட்டமையும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்
சிறி ரத்நாயக்கா கூறுகையில்,
இரண்டு வெவ்வேறு கட்சிகளில் இருந்து வாக்களிக்கப்பட்ட ஒருவர் உள்ளூராட்சி
மன்றத்தில் அமர்வதற்குத் தகுதியற்றவர்.
அவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் உறுப்பினராக அமர்வதைத்
தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.