எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இம்மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கடவுச் சீட்டு விநியோகம் ஒரு நாள் சேவை நிறுத்தப்படவுள்ளது. அத்துடன், சாதாரண சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.