‘அற்பவிடயங்களுக்காக போராட வேண்டாம். ஓர் அரசியல் சக்தியாக அரசமைப்பு,
வர்த்தமானிகள், சுற்றறிக்கைகள் மூலம் எமக்குக் கிடைத்த சலுகைகளை நாம் விட்டுக் கொடுத்துள்ளோம். எங்களுக்கு சிறிது அவகாசம் தாருங்கள். நீங்கள் தெருவில் இறங்கி எங்களை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை’ – இவ்வாறு மக்கள், தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா.
கொழும்பு – காலிமுகத்திடலில் நேற்று நடந்த மே தினக்கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘நாட்டில் தற்போது ஒரே அரசியல் சக்தியாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே உள்ளது. நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் தேசிய மக்கள் சக்தியையே நம்பியுள்ளனர். தேசிய மக்கள் கட்சிக்கு வெளியே எந்த சவாலும் இல்லை. அந்த சவால் தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள்ளேயே உள்ளது.
முரண்பாடுகளை எதிர் கொள்வதும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும் நமது சவால்.
ஆறு மாதங்களுக்குள் யாரும் விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. சரியான திட்டத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
எனவே,
தொழிற்சங்கங்கள் தங்கள் பழைய மனப்பான்மைகளை கைவிட்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் – என்றும் கூறினார்.