யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் நேற்று முன்தினம் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று நண்பகல், கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.