கொழும்பில் ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு சோதனை!

கொழும்பில் ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு சோதனை!

editor 2

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாகக் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று அவசர சோதனையொன்றை நடத்தியுள்ளனர். 

ரஷ்ய தூதரகத்திற்கு வெளிநாட்டவர் ஒருவர் வழங்கிய சந்தேகத்திற்கிடமான மடிக்கணினி ஒன்றினால் அங்கு வெடிகுண்டு அச்சம் ஏற்பட்டது. 

அந்த வெளிநாட்டவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினியைக் கொடுத்துவிட்டு, விரைவாகச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப்படையினர், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

எவ்வாறாயினும், சந்தேகத்துக்குரிய மடிக்கணினியில் வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்த கறுவாத்தோட்டம் காவல்துறையினர், இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article