பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்!

பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்!

Editor 1

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர்.

ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர்.

பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்க பொருத்தமற்ற நீராக காணப்படுவதோடு வறட்சி காலத்தில் குடிநீர் உட்பட நீர்த் தேவைகளுக்கு நெருக்கடியும் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்படுகின்ற குடிநீர் விநியோக நடவடிக்கைகள் பொது மக்களின் நெருக்கடி தீர்ப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்த மக்கள், பல பிரதேசங்களுக்கு தற்போது வரை நீர்விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்கள்.

எனவே, இது விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது பளை பிரதேசத்திற்கான நீர விநியோக நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொது மக்கள் குழாய் வழி குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கி உரிய கட்டணததை செலுத்துவதன் மூலம் நீர் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர்.

Share This Article