இலங்கையில் தீவிரம் பெறுகிறது கொரோனாப் பரவல்!

editor 2

நாட்டில் கொரோனாத் தொற்று நோய் மீண்டும் அதிகரித்து வருதுடன் கடந்த 20 நாட்களில் 16 கோவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23,27 ஆம் திகதிகளில் இரண்டு மரணங்களும்,மே முதலாம் திகதி ஒரு மரணமும் 5 ஆம் திகதி மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் கடந்த 8,9,11,12,14 ஆம் திகதிகளில் ஏழு பேர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு கூறியுள்ளது.

அதேவேளை, நாட்டில் டெங்கு நோய் பரவலும் அதிகரித்து வருகிறது.

மேல் மாகாணத்தில் 50 வீதமான டெங்கு நோயாளர் கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Share This Article