‘என்னை பதவி நீக்கினாலும் வேறு ஏதேனும் ஒரு வழியில் வந்தாவது மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துவேன்.’-என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.
‘இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
மக்கள் பக்கம் நின்றே நான் செயற்பட்டேன். உயர்தரப் பரீட்சை காலத்தில் மின் வெட்டை அமுலாக்க வேண்டாம் என வலியுறுத்தி னேன். அதற்காக உயர்நீதிமன்றத்தையும் நாடினேன்.
அந்த நடவடிக்கை தவறு என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்’ எனவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
‘என்னை இப்படியான செயற்பாடுமூலம் அச்சுறுத்த முடியாது. மக்களுக்காக அவர்கள் பக்கம் நின்று செயல் படும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்களை காக்கவேண்டியது மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும். சிலவேளை அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் அது வரலாற்று தவறாக அமைந்துவிடும். ‘ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.