நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

Editor 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .

Share This Article