தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல்!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல்!

Editor 1

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து தெல்லிப்பழை பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கொண்டு சென்றுள்ளது.

கடந்த 2ஆம் திகதி தெல்லிப்பழை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவரை சாதாரண விடுதிக்கு மாற்ற முற்பட்டபோது, அந்த நோயாளியின் நெருங்கிய உறவினர் ஒருவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

த்துடன், நோயாளிக்கு மருத்துவமனையில் வழக்கமாக அளிக்கப்படாத வசதிகளையும் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தினார். அத்துடன், மருத்துவரின்
கருத்துகளை மீறி தனக்கு தெரிந்தவர்களையும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் அழைத்துச் சென்றார்.

இதையடுத்து, அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்தவர்களை மருத்துவர் வெளியே செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து, மருத்துவரை மிரட்டும் பாணியில் அவர்கள் நடந்து கொண்டனர்.

அத்துடன், கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அன்றைய தினமே தெல்லிப்பழை பொலிஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் முறைப்பாடு செய்திருந்தது.

ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்தவிடயத்தை பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு

சென்றது.

இது தொடர்பில் அந்த அமைப்பு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு எழுதிய கடிதத்தில்,

கடந்த 2ஆம் திகதி மருத்துவமனைக்குள் வைத்து விடுக்கப்பட்ட மருத்துவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் தெல்லிப்பழை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டு, இருவாரங்கள் கடந்த நிலையிலும் சந்தேகநபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த பாதுகாப்பற்ற சூழல் குறித்து மருத்துவர்கள் மாத்திரமின்றி மருத்துவமனையின் அனைத்து சுகாதார பணியாளர்களும் ஏமாற்றத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர் – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Article