தேவாலயம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மன்னம்பிட்டியில் ஒருவர் கைது!

தேவாலயம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மன்னம்பிட்டியில் ஒருவர் கைது!

Editor 1

மன்னம்பிட்டிய பகுதியில் கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள கட்டடமொன்றின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன. 

சம்பவம் தொடர்பில் 38 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This Article