மட்டு. மாங்கேணியில் விபத்து; குடும்பஸ்தர் மரணம்!

மட்டு. மாங்கேணியில் விபத்து; குடும்பஸ்தர் மரணம்!

Editor 1

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் மீன் வியாபாரத்துக்காக வாழைச்சேனை பகுதியிலிருந்து மாங்கேணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரெத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article