யாழில் இளைஞர்கள் இருவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி தாக்கப்பட்டனர்!

Editor 1

வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்கள் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தமது வீடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், வன்முறைக் கும்பலொன்று முச்சக்கரவண்டியில் சென்று, அந்த இரு இளைஞர்களையும் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இளைஞர்களை கடத்திய அந்த கும்பல் அவர்கள் இருவரையும் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் பின், அவ்விரு இளைஞர்களையும் வீதியில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயங்களுடன் வீதியில் வீழ்ந்திருந்த இரு இளைஞர்களும் அவ்வீதியால் சென்ற சிலரால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மானிப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article