மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

Editor 1

எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகளை மூடப்பட வேண்டியிருந்தது.

தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

Share This Article