இத்தாலியில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் வடக்கு பகுதி எமிலியா – ரோமக்னா பகுதியிலேயே வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நகர் பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. அதேவேளை ஆயிரக்கணக்கான ஏற்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை வெள்ளத்தால் இத்தாலியின் 37 நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 120 இற்கு்ம மேற்பட்ட நிலச்சரவுகளும் ஏற்பட்டுள்ளன.