நீண்ட இழுபறியின் பின்னர் இந்தியாவின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரில் 20 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் காங்கிரஸின் சொத்து என்றும் காங்கிரஸ், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி, கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் முதல் மந்திரி மற்றும் துணை முதல் மந்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.